August 17, 2006

கல்கியும் நானும் -- இது ஒப்பீடு அல்ல

கொஞ்ச காலமா யாருக்கும் சொல்லாம ரகசியமா ஒரு காரியம் பண்ணிக்கிட்டு வரேன். நானும் சரி இந்த வாரம் பதிவுல எழுதிடுவோம் இல்ல அடுத்த வாரம் எழுதிடுவோம் இப்படி தள்ளி போயிடுச்சு. அட ரொம்ப 'Build up' அ இருக்கா? நம்ம வலை நண்பர்கள் பல பேர் என்னை பொன்னியின் செல்வன் கதையை படிக்க சொல்லிக்கிட்டே இருந்தாங்க. சிலர் இன்னும் இறங்கி வந்து பின்னுடத்திலே பின்னி எடுத்திட்டாங்க. இந்த பாலைவனத்துல தண்ணியே இல்ல, இங்க போய் நான் யார் கிட்ட கல்கி புத்தகத்தை கேக்குறது.

இந்த நினைப்புலேயே ஒரு நாள் இனையத்துல சுத்திக்கிட்டு இருக்கும் போது, Project Madurai னு ஒரு பக்கம் மாட்டிச்க்கிச்சு. உள்ள போனா அப்படியே நம்ம தமிழ் இலக்கியத்த எல்லாம் PDF கோப்புகள தொகுத்து வச்சிருக்காங்க. உடனே கல்கி புத்தகத்தை பதிவிறக்கம் பண்ணிட்டேன்.

பதிவிறக்கம் பண்ண கோப்பை திறந்தா உள்ள ஒரு நாலு, ஐந்து முக்கிய கதைங்க இருக்குது. அதுல நம்ம பொன்னியின் செல்வன் கதைத்தான் ரொம்ப பெரிசு. எனக்கு ஒரு பழக்கம் இருக்குதுங்க. எந்த கதை எடுத்தாலும் ஒவ்வோரு பத்தியையும் 2-௩ தடவைப்படிக்கனும். அப்பதான் எனக்கு முழுசா புரியும். முதன் தடவைப்படிக்கும் போது கதையில் கவனம் இருக்கும், அடுத்த முறையிலே ஆசிரியர் கதைக்குள் வைத்திருக்கும் சுவையில் கவனம் இருக்கும். ஆசிரியர் எதாவது உவகை வைச்சு சொல்லியிருந்தா அவ்வளவுதான் ஒரு நாள் முழுதும் அதையே படிச்சுக்கிட்டு இருப்பேன். நீங்களே சொல்லுங்களேன், ஒரு சுவையான தேனிரை ஒரே முறையில் முழுவதும் குடித்தால் நல்லா இருக்குமா? கொஞ்சமா சுவைய பரவ விட்டு குடித்தால் தான் பல மணி நேரத்துக்கு அடிநாக்குல இனிப்பு தங்கும்.

இது என்னடா வம்பா இருக்குது, இந்த பொன்னியின் செல்வன் கதைய படிக்க எனக்கு ஒரு வருஷமாகும். சரி எதாவது சின்ன கதை இருக்குதானு பார்த்தேன். முதல்ல கிடைச்சது சோலைமலை இளவரசி. உடனே நான் விமர்சனதை ஆரம்பிப்பேன்னு நினைக்காதிங்க. கல்கி கதைய நான் விமர்சனம் செய்தால், நீங்க பக்ரைனுக்கு வந்து உதைப்பிங்க. நான் எனக்குள் உணர்ந்த அனுபவங்களை சொல்ல போறேன் அவ்வளவுதான்.

இந்த கதை 12B படம் மாதிரி இரண்டு பாதையிலே பயணிக்கும். இரண்டு பாதைக்கும் ஒரு 100 வருஷம் இடைவெளி இருக்கிறது. ஆனா! கதை கரு மற்றும் கதை களம் ஒன்று. சுதந்திர போராட்டம் தான் கதையின் முக்கிய கரு. அதை இரு வேறு கோணத்தில் சொல்லியிருக்கிறார். கதை 1942 அம் வருடம் தொடங்குகிறது. அப்போது கொழுந்து விட்டேரியும் சுதந்திர போராட்டத்தில் ஒரு வீரன் (குமாரலிங்கம்) கிளர்ச்சி செய்துவிட்டு ஒரு பழைய கோட்டைக்குள் பதுங்குகின்றான். அதில் இருந்து மற்றோரு கதை ஆரம்பிக்கிறது.

கல்கி கதையை காற்றின் வேகத்தில் கொண்டு சென்றிருக்கிறார். படிக்க ஆரம்பித்த உடன் எதோ கதை என் கண்முன்னால் நடத்திக்காட்டுவது போல் இருந்தது. இது போல நான் எந்த மொழியிலும் கதை படித்தது இல்லை. இதில் இரண்டு காதல் கதை வேறு இன்னும் வேகம் சேர்த்திருக்கிறது. உண்மையில் சொல்ல வேண்டுமானால் எனக்கு நான்கு கண்களும் இரண்டு மனமும் தேவைப்பட்டன. ஒன்று சுதந்திர போராட்டதில் கவனத்தை செலுத்த மற்றொன்ரு குமாரலிங்கம் - பொன்னம்மாள், உலகநாத தேவர் - மாணிக்கவல்லி காதலின் சுவையை அறிய. சிலருக்கு காதல் கதைகள் நன்றாக எழுத வரும், மற்றவருக்கு சரித்திர கதையில் சரித்திரம் படைப்பர். ஆனால், கல்கி இரண்டிலும் தெளிவாக விளையாடுகிறார்.

அவர் சோலைமலை அரண்மனையை விளக்கிய விதம் அந்த அரண்மனையில் வாழ்ந்தது போல் இருந்தது. கதையை ஆரம்பித்த உடன் முடிக்கும் வரை வேறு எதிலும் என்னால் முழுவதுமாக கவனம் செலுத்த முடியவில்லை. இந்த கதையில் ஒரே ஒரு குறைதான், இரண்டு காதல் ஜோடிகளும் இறுதி வரை சேரவிடாமல் செய்துவிட்டார். இந்த கதையில் சில காட்சிகள் இப்போது வந்துள்ள புலிகேசி படத்தில் பயன்படுத்தபட்டுள்ளன. இயக்குனருக்கு கல்கி கதைகளின் பாதிப்பு இருப்பது தெளிவாக தெரிகிறது.

சோலைமலை இளவரசி முடித்தவுடன் அடுத்து என்ன கதை தொடங்குவது எனத்தேடினேன். உடனே கண்ணில் பட்டது பார்த்திபன் கனவு. தற்போது பார்த்திபன் கனவின் முதல் இரு பாகத்தை முடித்து படித்துவிட்டேன். இறுதி பாகம் மட்டும் மீதம் உள்ளது. இந்த கதைப்பற்றி மற்றோரு பதிவு எழுதுகிறேன். பார்த்திபன் கனவின் கதையில் மாமல்லபுரததின் அழகை ஆசிரியர் வர்ணித்திருப்பார். இதைப்படித்ததும், 'அட இவ்வளவு அழகுள்ள மாமல்லபுரத்தை காணாமல் இருந்துவிட்டோமே?' என வருந்தினேன். சரி இந்தியா திரும்பினதும் மகாபலிபுரத்துக்காவது செல்ல வேண்டும் என எண்ணி அதை முடிவு செய்ய நண்பனுக்கு போன் செய்தேன். நான் மகாபலிபுரம் என்று அவனிடம் சொன்னதும், அவன் 'ஆமாடா! நீயும் நானும் மாயாஜால் போய் ரொம்ப நாள் அச்சு. சீக்கிரம் வா ஒரு தடவை போய் வரலாம்' என்றான். நான் மேலும் எதுவும் அதைப்பற்றி பேசாமல் வைத்து விட்டேன்.


சரி இப்போ என் கதைக்கு வருவோம். கடந்த வாரம் எனது வலை நண்பர் மோகனின் வலைப்பூக்கள் பகுதிக்கு ஒரு பதிவு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. சரி இந்த மாதிரி வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எண்ணிணேன். தலைப்பு கடினமானது அல்ல. முன்பே எழுத வேண்டும் என வைத்திருந்த தலைப்புதான். வழக்கம் போல் எனது நடையில் எழுத ஆரம்பித்தேன். முதலில் சிறிது சுலபமாகவே இருந்தது. பதிவின் பாதியில் இருந்து சில கருத்துக்கள் சொல்வது போல் அமைக்க வேண்டும். சொல் நடையில் எழுதி வந்த நான் இங்கே தடுமாற ஆரம்பித்தேன். கருத்துக்கள் சொல் நடையில் எழுதினால் படிப்பவர்க்கு அறிவுரை கூறுவது போல் இருக்கும். மறத்தமிழர்கள் ஆகிய நாம் மற்றவர் கூறும் அறிவுரைகளை அவ்வளவு எளிதில் எடுத்துக்கொள்ள மாட்டோம். என் அப்பா சொல்லிய அறிவுறைகளை நான் கேட்டது கூட கிடையாது. ஆகையால் இந்த நடையில் கருத்துக்களை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.

சரி இந்த நடையில் இருந்து மாற்றி எழுத ஆரம்பித்தேன். இறுதியில் ஒரு மாதிரியாக முடிந்தது. அது அவ்வளவு நன்றாக வரவில்லை. அதை மோகனுக்கு அஞ்சல் செய்தேன். அவரும் படித்து விட்டு என் எண்ணத்தையே சொன்னார். சரி என்று முழுவதுமே சொல் நடையில் எழுதினேன். அதை மோகன் அவரது வலைப்பூக்கள் பகுதியில் வெளியிட்டார். நான் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது இந்த இருப்பதிப்பையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நான் இதுவரை அதிக சிரத்தை எடுத்து எழுதின பதிவு இதுவாகத்தான் இருக்கும். உங்களின் விமர்சனங்களை எதிர்ப்பார்கிறேன்.

வெளிவராத பதிவு..

வெளிவந்த பதிவு...



கடந்த பதிவில் தமிழில் சொல்த்திருத்தி கிடைக்குமா? என கேட்டு இருந்தேன். வலை நண்பர்கள் சிலர் உடனே சில இனைப்புகளை அனுப்பி இருந்தனர். நன்றி லெச்சுமி பாட்டி, கிருஷ்ணன் மற்றும் அனானி.. உங்கள் வருகைக்கு நன்றி. இவற்றை நான் இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை. இவை உங்கள் பார்வைக்காக.

http://www.ildc.in/GIST/htm/spell_checher.htm

KURALSOFT.COM

http://cmadras.com

மேற்குறிய கல்கி புத்தகங்களை வேண்டுவோர் எனக்கு தனிப்பட்ட முறையில் அஞ்சல் செய்யவும்.

நன்றி,

ஸ்ரீதர்

1 Comments:

At August 21, 2006 3:30 AM, Anonymous வேந்தன் said...

I have read most of kalki's books.
but now only i know about சோலைமலை இளவரசி.
Can you send me that one.
my mail id karvendan.p@gmail.com
I can't get your mail id. so i am request you here.Thank you.

 

Post a Comment

<< Home