அர்த்தநாரிஸ்வரரும் டேவிட் நட்சத்திரமும்

கடந்த சில வாரமா கொஞ்சம் வேலை அதிகமா இருந்ததால, அதிக நேரம் இனையத்தில இருக்க முடியலை. அதுக்குள்ள தப்பா நினைச்சுட்டிங்களே ... அலுவலகத்திலே இன்னும் வேலைப்பாக்க ஆரம்பிக்கலை.. நம்ம நண்பரோட பிறந்தநாள் அதான் கொஞ்சம் 'Busy' ஆகிட்டேன். நம்ம விநாயகருக்கு இது எத்தனையாவது பிறந்தநாள் னு யாருக்கும் தெரியாது. ஆனா, அந்த பிறந்தநாள் களைக்கட்டிடும்.
இதுவரைக்கும் எல்லா விநாயக சதுர்த்திக்கும் வீட்டிலே இருந்திருக்கிறேன். இந்த வருஷம் மட்டும் இங்க வந்து மாட்டிக்கிட்டேன். இந்த ஊர்ல இருக்கிற மூலை முடுக்கேல்லாம் அலைஞ்சு திரிஞ்சு ஒரு வழியா எல்லாத்தையும் வாங்கியாச்சு. சரி விநாயகருக்கு எதுவும் படைக்காம கும்பிட்டா கோவிச்சுப்பாரு. அதனால, என்ன பண்ணலாம் யோசனை. முதல்ல ஞாபகம் வந்தது சுவையான கொழுக்கட்டைத்தான். ஆகா! நல்ல யோசனை தான் ஆனா முடிவு எப்படி வரும் னு தெரியலையே. ஆண்டவன் மனிதனை சோதிக்கலாம், ஆனா, மனிதன் ஆண்டவனை சோதிக்க கூடாது. நல்ல நாள் அதுவுமா பதார்த்தம் பண்றேன் னு சொல்லி, கடைசில் எதுவும் ஒழுங்கா வராம ஆண்டவன் 'நீ பிரம்மசாரியாகவே வாழ்வாயாக' னு சாபம் தந்துட்டா அவ்வளவுதான். இப்படியா முடிவு பண்ணி கடைசிலே சுண்டலும், சர்க்கரை பொங்கலும் பண்ணி சாமி கும்பிட்டாச்சு.

சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம். சாமி விக்கிரகத்தை வைச்சு அலங்காரம் பண்ணும் போது என்ன கோலம் போடலாம் னு ஒரு யோசனை (மறுபடியுமா?). எல்லோர் வீட்டிலயும் ரொம்ப சுலபமா ஒரு நட்சத்திரம் போட்டு நடுவில ஒரு புள்ளி வச்சுடுவாங்க. இந்த நட்சத்திரத்தில ஒரு சிறப்பு இருக்கும். இதுக்கு ஆறு மூலைகள் இருக்கும். இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில இருக்கிற நட்சத்திரத்துக்கு 5 மூலைகள் தான் இருக்கும்.

இதை பாத்ததும் உங்களுக்கு எதாவது ஞாபகம் வருதா? ஒன்னும் வரலைனா நீங்க இன்னும் 'The Da Vinci Code' புத்தகம் படிக்கலைனு அர்த்தம். அந்த புத்தகத்துல 'Dan Brown' இந்த நட்சத்திரத்தை (Solomon's star) பத்தி சொல்லுவார். நல்லா பாத்திங்கனா, இந்த நட்சத்திரம் இரண்டு மூக்கோணம் சேர்ந்த மாதிரி இருக்கும். ஒரு மூக்கோணம் மேலே பார்த்த மாதிரியும், மற்றது கீழே பார்த்த மாதிரியும் இருக்கும்.

மேலே பார்த்து இருக்கிற மூக்கோணம் (Blade) , ஆண்களை குறிக்கும். இது ஆண்களின் ஆதிக்கம் மற்றும் முன்கோபத்தை குறிக்கும்.

கீழே பார்த்த மாதிரி இருக்கிற மூக்கோணம் (chalise), பெண்களின் சக்தி, பெண்மை மற்றும் வளமையை குறிக்கும்.

மேல் கூறிய நட்சத்திரம் இந்த இரு மூக்கோணத்தையும் சரியாக சேர்த்தது போல் வரையப்பட்டிருக்கும் இருக்கும். இது ஆண் மற்றும் பெண்ணின் சக்திகள் ஒன்று கூடி இருப்பது போல் இருக்கும். இன்னும் கொஞ்சம் சிந்திச்சு பாத்திங்கனா, இது நம்ம அர்த்தநாரிஸ்வரரை குறிக்கும். இதில் சிவனும், பார்வதியும் ஒரே உடலாக காட்சி தருவார்கள். இது இறைவன் ஆண், பெண் இருவரும் சமம் என குறிப்பது போல் இருக்கும்.

இந்த நட்சத்திரம் இந்து மதத்தில் மட்டும் அமைந்தது அல்ல. சிறிது குகூள் தேடலுக்கு பிறகு, இஸ்லாம் மதத்தில் ஒரு குரான் இந்த நட்சத்திரத்தை கொண்டுள்ளது. ஆகவே இந்த நட்சத்திரம் மதம் சம்பந்தப்பட்டது அல்ல. எல்லா மதத்திலும் பொதுவாக அமைந்திருக்கிறது. அல்லது இந்த வழக்கு மதங்கள் தோன்றும் முன் இருந்திருக்கலாம்.

இப்போது இந்த நட்சத்திரத்தை சிறிது ஆராய்வோம். இரண்டு முக்கோணம் இணையும் போது இறைவனை குறிக்கும் நட்சத்திரம் உண்டாகிறது. இந்த முக்கோணம்கள் குறிக்கும் ஆண், பெண் இனையும் போது இறை நிலையை அடைகின்றனர். இந்த இறை நிலையை இந்து மதம் அர்த்தநாரிஸ்வரர் என வணங்குகிறது. இறைவனால் தான் உயிர்களை உண்டாக்க முடியும். ஆனால், ஆண், பெண் இணையும் செயல் உயிரை உருவாக்குவதினால், இந்த செயலும் இறைவனை குறிக்கும்.
எனது வீட்டில் இந்த நட்சத்திரம் வரைந்த பின் நடுப்பகுதியில் ஒரு புள்ளி வைப்பார்கள். நான் இனையத்தில் சேகரித்த எல்லா படங்களிலும் இந்த நட்சத்திரத்தின் நடுப்பகுதியில் எதாவது ஒரு குறிப்பு அமைந்திருந்தது. இதை அர்த்தநாரிஸ்வரர் தோற்றத்துடன் ஒப்பீடு செய்து பார்த்தேன்.
அர்த்தநாரிஸ்வரர் உருவத்தில் ஆண், பெண் உருவத்தில் பொதுவாக அமைந்துள்ள பாகம் எது? சிவன் வலது பக்கமும், சக்தி இடதுப்பக்கமும் அமைந்தது போல் இருக்கிறது. இந்த அமைப்பில் பொதுவாக உள்ள பாகம், நெற்றிக்கண்.
நெற்றிக்கண் என்பது இறைவனுக்கு மட்டுமே உள்ளது என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். உலகத்தில் உள்ள எல்லா மனிதருக்கும் இந்த நெற்றிக்கண் இயற்கையிலே அமைந்திருக்கிறது. நமது மூளையில் ஒரு பகுதி ஹைப்போதலாமஸ். இது மனித மூளையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. தலை உச்சியில் இருந்து கீழ் நோக்கி நேர் கோடு வரையுங்கள், புருவ மத்தியில் இருந்து மற்றோரு நேர் கோடு பின் நோக்கி வரையுங்கள். இந்த இரு கோடுகள் சங்கமிக்கும் இடமே (Intersection point) ஹைப்போதலாமஸ் பகுதியாகும்.

இதை குண்டலினி தியான முறைப்படி அஜ்ன சக்கரம் என்பர். தியான முறையில் ஒரு கட்டமாக இந்த அஜ்ன சக்கரத்தில் குண்டலினி சக்தியை நிறுதி தியானம் புரிவர். இப்படி தியானம் செய்யும் போது ஒருவர், காலத்தை வென்றவர் என கூறுவர். அதைப்பற்றி ஒரு பிரபல அமேரிக்க மருத்துவரின் கருத்தை நான் முன்பு பதிவிட்டிருந்தேன். இப்படி தியானிப்பவர்கள் இறைவனை கண்டதாக கூறுவர். அவர்களும் எல்லை அற்ற ஆற்றல் இருப்பதை உணர முடியும். தியானமுறையில் இது அளவற்ற சக்தியின் இருப்பிடமாக கருதபடுகிறது.
நாம் வீட்டில் வரையும் இந்த நட்சத்திரத்தின் நடுவில் வைக்கும் புள்ளியை இதுவாக எண்ணுகிறேன்.இது உண்மையாக இருக்கும் வேளையில், நெற்றிக்கணை உணர்ந்த எல்லா மனிதர்களும் இறைவனாகலாம்.
கண்ணதாசனின் ஒரு பாடல்,
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்!
வாழைபோலே தன்னை தந்து தியாகியாகலாம்
உருகி ஓடும் மெழுகை போன்று ஒளியை வீசலாம்!
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!
Sources:
சாலமன் நட்சத்திரம்
அஜ்ன சக்கரம்
சர்க்கரை பொங்கல் (ரவி எனது ரூமீ, Patent Rights வாங்கி வைத்துள்ளார்)
- ஸ்ரீதர்

0 Comments:
Post a Comment
<< Home