September 25, 2006

காதல் சொல்லும் சூபி

நண்பர்கள் பலர் விடியோ பதிவு போட ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் குறிப்பா நம்ம நண்பர் கிருஷ்ணன் இருக்காரே, எல்லா பதிவுகளிலும் படக்காட்சியையும் போடு விடுவார். சரி நாம மட்டும் சும்மா இருந்தா ஒன்னும் தெரியாத புள்ளனு தப்பா பேசுவாங்க. அதனால ஒரு பட பதிவு.

நான் பல முறை சொன்ன மாதரி, நமக்கு சுட்டு போட்டாலும் இந்தி வராதுங்க. அதுல பாருங்க, இந்த வட நாட்டு மக்கள் இருக்காங்களே, இந்தி தெரியாதுனா, எதோ திவிரவாதிய பாக்குற மாதிரி பாப்பானுங்க. இதனாலயே இந்தி மேலே இரு ஈர்பு இல்லாம போச்சுது. ஆனா! இந்தி பாட்டுனா மட்டும் உக்காந்திடுவேன் (Heroin அ பாக்குறதுக்கும் தான்). மொழி தெரியாததுனால, முழு கவனமும் இசைல (Heroin மேலையும்) தான் இருக்கும்.

லக்ஷ்மிகாந்த்-பியாரிலால், பர்மன் சகோதரர்கள் இவங்க பாட்டுகளை புதன் கிழமை சித்திரகார்னு ஒரு நிகழ்ச்சியில போடுவாங்க. பர்மன் சகோதரர்கள் போட்ட மெலோடி இசை அருமையா இருக்கும். நமக்கு இசைய பத்தி ஒரு அறிவும் கிடையாது. ஆனா! மெலோடி பாட்டுனா ரொம்ப பிடிக்கும். பல வருஷ இசையை ரசித்த பிறகு, இப்போ கர்னாடக சங்கிததுக்கும், இந்துஸ்தானிக்கும் வகைபடுத்த தெரியுது. இப்போ அரேபிய பாடல்களும் கேக்க ஆரம்பிச்சுடேன்.

லக்ஷ்மிகாந்த்-பியாரிலால், பர்மன் சகோதரர்கள் இவங்க காலத்துக்கு அப்புறம் எனக்கு தெரிஞ்சு ஒரு நல்ல இந்தி இசையமைப்பாளரும் இல்லை. எல்லோரும் அமெரிக்க மோகம் பிடிச்ச மாதிரி இசை அமைக்கிறாங்க. எல்லாம் Club Dance வகையை சேந்தது தான். நரகாசமா ஒலிக்கிறது. குரங்கு கையிலே பூமாலை தந்த என்ன ஆகும்னு இவங்களை பாத்து புரிஞ்சிக்கலாம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தற்செயலா ஒரு இந்தி பாடல் பாத்தேன். ரொம்ப வித்தியாசமா இசை அமைச்சு இருந்தாங்க. படமாக்கபட்ட விதமும் ரொம்ப இயல்பா இருந்துச்சு. உடனே தேடி பிடிச்சு ipodகுள்ள போட்டுடேன். இன்னும் சில காலத்துக்கு என்னுடைய ipod பாடி அலுத்திடும். சரி அந்த பாடலை நீங்களும் பாருங்களேன்.



நல்லா இருக்கா? இந்த பாடல் பத்தின விவரங்கள் இங்கே,

படம்: கல்யுக் (Kalyug)
இசையமைப்பாளர்: அனு மாலிக்
பாடகர்: maestro Rahat Fateh Ali Khan
வெளிவந்த வருடம்: 2005
சங்கிதம்: சூபி

கல்லூரி காலத்துல, நமக்கு கவிதை தண்ணி மாதிரி வரும் (தண்ணி லாரி இல்லைங்க). எதாவது இசைய கேட்டா, உடனே கண்ணதாசன் மாதிரி எழுத ஆரம்பிச்சுடிவேன் (இது ரொம்ப over). இப்போ வத்தி போன பாலைவனம் மாதிரி சுத்தமா கற்பனையே இல்ல. இந்த பாட்டை கேட்டவுடனே எழுதனும்னு ஆசை. கொஞ்சமா கஷ்டப்பட்டு இதோ எழுதி முடிச்சுட்டேன். கீழே இருக்கும் பாடலுக்கும், இசைக்கும் பொருத்தம் இல்லைனா அதுக்கு நான் பொருப்பில்லை (அப்பா! தப்பிச்சுடேன்).

ஒரு நிலவு நிலவு சிரிக்கும்,
அந்த சிரிப்பில் ஈர்ப்பு இருக்கும்
முகில் இழுத்து முகம் மூடும்
கையில் கிட்டாமல் ஒடும்.
அன்பே நீ தோன்றும் தருணம்,

இதயம் துடிக்கும் துடிக்கும்,
இது துடிக்கும் துடிக்கும்,
இது துடிக்கும் இதயம் தானே.

பிரிந்த போன என் இதயம்,
உன் பாதம் கண்டு பணியும்
இதழ் பூக்கும் வார்த்தைக்காக
இமைத்தட்டாமல் விழித்திருக்கும்.
உன் மனம் இசையும் வரை,

இதயம் துடிக்கும் துடிக்கும்,
இது துடிக்கும் துடிக்கும்,
இது துடிக்கும் இதயம் தானே.

அந்தி சாயும் மழை காலத்தில்,
அந்த ஒரு மலை பாதையில்
தனித்து நின்றிருந்தேனே
உனக்காக விழித்திருந்தேனே
கண்ணே உன்னை கண்டதும்

இதயம் துடிக்கும் துடிக்கும்,
இது துடிக்கும் துடிக்கும்,
இது துடிக்கும் இதயம் தானே.


- ஸ்ரீதர்

0 Comments:

Post a Comment

<< Home