முதலாம் ஆண்டு நினைவு பதிவு

நான் வலைப்பூல பதிவு எழுத ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகுது. சரியா சொல்லனும்னா போன தெலுங்கு வருஷப்பிறப்புக்கு எழுத ஆரம்பிச்சேன். அதனால அவங்க calender படி இன்றோட ஒரு வருஷம் ஆச்சுது.
ஏன், ஏதுக்கு எழுத ஆரம்பிச்சேன் எல்லாம் ஞாபகம் இல்லை. முதல்ல தமிழ் எனக்கு எழுத வருமானு ஒரு சந்தேகம். அதே மாதிரி மத்தவங்க எழுதுறத படிச்சிட்டு மனசுக்குள்ள ஒரு சின்ன நப்பாசை. உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாதுனு சொல்லுவாங்க. அந்த மாதிரி ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் எழுதினேன். தெரிஞ்சது, தெரியாதது, கேட்டது, பார்த்தது ஒன்னு விடாம பதிவுல போட்டுடனும்னு ஒரு ஆசை. சில பதிவுகளை திரும்ப நானே படிக்கும் போது சிரிப்புதான் வரும். எல்லா பதிவாளர்கள் மாதிரியும் பின்னுடத்துக்காக காத்திருந்தேன். பல சமயம் என் எழுத்து திறமையால பல பேரு என்னோட பதிவ ஏட்டிப்பார்த்திட்டு திரும்பிப்பாக்காம ஓடிட்டாங்க. ஆனாலும் எழுதனும் என்ற ஆசை மட்டும் போகவே இல்லை.
நான் எழுத ஆரம்பிச்ச பிறகு மற்ற பதிவாளர்கள் பதிவை படிக்க நேரம் குறைவா இருந்துச்சு. அதிகமா படிக்க முடியாததுனால சரியா பதிவு எழுத முடியாதுனு நினைச்சேன். அதனால ஒரு நாள் கொஞ்சம் பதிவு உலகத்துல இருந்து விலகி இருக்கனும்னு தோணிச்சு. அதனால ஒரு ஆறு மாசமா எந்த பதிவும் போடல.
ஆனா, எப்போதும் எங்கயாவது ஒரு மூலைல எதாவது எழுதிக்கிடேதான் இருப்பேன். இன்றைக்கு 'Yahoo Answer'ல முதல் தடவையா என்னோட பதில சிறப்பு பதிலா (Best Answer) தேர்வு ஆகியிருக்கு. இது ஒரு குழந்தைகள் பத்தின கேள்வி. ஒரு அம்மா தன்னோட பையன் ரொம்ப அடம் பண்றான், எப்படி சமாளிக்கிறதுனு கேட்டிருந்தாங்க. இந்த கேள்விக்கு தான் என்னோட பதில், Best Answerஅ தேர்வு ஆகியிருக்கு.
இந்த பதில் என்னோட சொந்த பதில் இல்லை. ஒரு முறை 'Star World'ல வர 'ஓப்ராய்' நிகழ்ச்சில ஒரு அம்மணி சொல்லி தந்த முறைத்தான் இது. நான் இத சில சமயம் பயன்படுத்தி இருக்கிறேன். சரியா வேலை செஞ்சது. அதேயே தான் அவங்களுக்கும் சொன்னேன். அந்த பதிலை படிக்க இங்கே சுட்டவும்.
இந்த ஒரு வருஷமா ஒரே பொய்ய சொல்லிட்டு வரேன். இது நான் எழுதிய முதல் பதிவின் ஒரு பகுதி..
இன்று 159வது நாள். அன்னிய நாட்டில் எனது வாழ்க்கை பயணத்தை தொடர்கிறேன். ஒவ்வொரு வாரமும் திரும்பிவிடுவேன் என அம்மவிடம் பொய் சொல்லி கொண்டு வருகிறேன். ஒரு நாள் அது நிஜமாகும்.
அந்த பொய் இன்னும் தொடர்கிறது. :-)
ஸ்ரீதர்

7 Comments:
//இன்று 159வது நாள். அன்னிய நாட்டில் எனது வாழ்க்கை பயணத்தை தொடர்கிறேன். ஒவ்வொரு வாரமும் திரும்பிவிடுவேன் என அம்மவிடம் பொய் சொல்லி கொண்டு வருகிறேன். ஒரு நாள் அது நிஜமாகும். //
சீக்கிரம் நிஜமாகட்டும்...
வாழ்த்துக்கள் அனைத்திற்கும்
சென்ஷி
உங்கள் பதிலைப்படித்தேன் .
நல்ல வழிமுறை , விளையாட்டாய்
அவர்கள் அளவுக்கு இறங்கி
செய்தால் எளிதில் நாம் சொல்வதை
அவர்கள் கேட்பதை அனுபவத்தில்
நானும் உணர்ந்திருக்கிறேன்.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.. உங்கள் வாழ்த்திற்க்கு நன்றி சென்ஷி..
முத்துலெட்சுமி..
உங்கள் வருகைக்கு நன்றி.. குழந்தைகள் எப்போதுமே தவறு செய்வதில்லை... நாம் தான் தவறாக புரிந்து கொள்கிறோம். இதை விளக்கியது என் பதில், உங்கள் பின்னுடம் கூட தான்.
- ஸ்ரீதர்.
ஸ்ரீதர்,
ஓராண்டுப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீதர், தமிழில் எழுத வேண்டுமென்ற சிந்தனையே பாராட்டுக்குறியதாகும். எளிமையான பேச்சு வழக்கில் உள்ள உங்கள் எழுத்து நடை ரசிக்கத்தக்கதாக உள்ளது. நிறைய தொடரட்டும் தங்கள் எழுத்துப் பயணம் . . . வாழ்த்துக்கள்.!
@வெற்றி...
உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி
Post a Comment
<< Home