தனிமை என்னுடன் ..

தனிமை என்பது இந்த உலகத்திலே ஒரு பயங்கரமாக தண்டனை. இதை வாழ்க்கை சூழலில் எல்லோரும் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டும். தனிமை ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசமாக இருக்கும். சிலருக்கு போது இடத்துல தனியா இருப்பது கொடுமையா இருக்கும். இன்னும் சிலருக்கு எல்லோரும் கூட இருந்தும் தனியா விட்ட மாதிரி இருக்கும். இது முதுமைல மட்டும் வராது. எல்லா வயதினரும் தனிமை உணர்வு உண்டு.
சாதாரணமாக தனிமை என்பது விரக்தியின் வெளிப்பாடாக இருக்கலாம். நாம் எதிர்ப்பார்த்த ஒன்று கிடைக்காமல் போனால் ஏற்படும் விரக்தி, "இந்த உலகத்தில் என்னை நினைப்பதற்கு எவருமில்லை" என்ற எண்ணம் தோன்றி தனிமையாக வெளிப்படும்.
ஆங்கிலத்தில் தனிமையை இரு வார்த்தைகளால் கூறலாம். "Alone" & "Lonely".
Alone - நான் தனியாக இருக்கிறேன். என்னை சுற்றி எவரும் இல்லை.
Lonely - நான் தனிமையை உணர்கிறேன்.
எனக்கு தனிமை ஒரு மாறுப்பட்ட அனுபவம். வேலை எதுவும் இல்லாத போது, சிந்தனை செயலற்று போகும் போது நான் தனிமையை உணர்வேன். அப்படி தனிமையில் நான் எழுதின கவிதை ..
ஒளியற்ற பரபஞ்ச பிண்டமாய்
சிறையிட்ட பேசா மடந்தையாய்
கரையற்ற பெருங் கடலாய்
தனிமை என்னை வருத்தும்.
கிளை உதிர்த்த இலையாக
அக்னி தனிந்த தூசாக
விடியல் சிதைத்த பனியாக
தனிமை என்னை உருக்கும்.
இதய துடிப்பே முரசாக
இருள் இரவே படையாக
இமைக்கும் கணமே வேலாக
தனிமை என்னை வெல்லும்.
தனிமையை தவிர்க்க சிலர் தொலைபேசியில் பேசுவர்கள். இசை கேட்பார்கள். படித்து முடித்த புத்தகத்தை மீண்டும் நடுவில் இருந்து தொடருவார்கள். தூங்குவார்கள். நீங்க தனிமையை உணரும் போது என்ன செய்வீர்கள்.. பின்னுடம் இடவும்...
ஸ்ரீதர்.

7 Comments:
பார்த்தீர்களா, தனிமையில்தான் கவிதை படைக்க முடிந்தது! - அதைப்போய் தண்டனை என்கிறீர்களே?
தனிமையில் படைத்த கவிதை அருமை. பாராட்டுகள். சொற்கள் வந்து விழுகின்றன.
//கரையற்ற பெருங் கடலாய்
விடியல் சிதைத்த பனியாக//
தனிமையை எல்லோரும் உணர்கிறார்கள். சிலரே கவிதை படைக்கிறார்கள்.
நான் வேலை எதுவும் இல்லாத போது, சிந்தனை செயலற்று போகும் போது தனிமையை உணர்வேன். அப்போது கணிணியே துணை என புல் மேய்வேன். தனியே நடை பயிலுவேன் - இருளிலும் கூட.
தனிமையை விரட்ட தனிமையையே துணை கொள்வேன்
நன்றி ஜீவா!
தனிமை தண்டனை சொன்னது தவறுதான்.. சிதறும் நொடிகளில் சிந்தனையற்று இருந்ததால் தண்டனை என்று சொன்னேன்.
ஸ்ரீதர்..
@சீனா...
//தனிமையை விரட்ட தனிமையையே துணை கொள்வேன்//
பட்டைய கிளப்பிட்டீங்க.. வாழ்த்துக்கள்..
ஸ்ரீதர்..
தனிமை என்பது அழகானது.தனிமையில் இருக்கும் போது நான் எனக்கு உண்மையாக இருப்பதாக உணர்கிறேன்.
தனிமையில் இருக்கும் போது என்னைப்பொறுத்த வரையில் என் ஆழுமைகள் விருத்தி பெறுகின்றன.ஆனால் உண்மையி;;ல் யாரும் நூறுவீதம் தனிமையாக இருப்பதில்லை.சிலருக்கு அவ்வீதம் அதிகமாக இருக்கும்.சிலருக்கு குறைவாக இருக்கும்.தனிமையை இனிமையாக்குவது எங்கள் கையில் தானே இல்லையா?
வாங்க சேரன்...
கண்டிப்பாக தனிமையை இனிமை ஆக்குவது நம்ம கையில்தான் இருக்கு. இல்லனா, இந்த மாதிரி உக்காந்து கவிதை எழுத முடியுமா..
உங்க தனிமையை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி..
ஸ்ரீதர்..
தனிமை எனக்கு எல்லாம் இனிமை.சுதந்திர பறவையைப் போல உணர்வது தனிமையில் மட்டுமே.தனிமையும் எனது நண்பனாக மாற்றி கொள்ளவும் பழகி விட்டேன்.தனிமையில்தான் எனக்கு எழுத கவிதை கதை எல்லாம் வரும்.எனது தனிமையில் இதற்கே நேரம் சரியாக இருக்கும்.நான் ஒரு தனிமை விரும்பி
Post a Comment
<< Home