கடந்த வாரம் ஏழுதிய துகளுக்கு விமர்சனத்தை அறிந்தேன். வார்த்தை பிழையை குறைக்க வேண்டும். அதற்காக ஏழுதுவதை நிறுத்த போவதில்லை. திருவிளையாடல் படத்தில் ஒரு காட்சி,
" எனது Blog'ல் பிழை உள்ளதா !!!
வார்த்தை பிழையா !! அல்லது
பொருட் பிழையா !! "
கண்டிப்பாக பொருட்பிழையாக இருக்காது. (இல்லாத பொருளுக்கு பிழை எது?)
சமீபத்தில் ஒரு நாவலை படிக்க தொடங்கி உள்ளேன். Sidney Shelton' னின் "The stars shine down". அது ஒரு பெண் தொழிலதிபரின் (லாரா) கதை. முதல் பாகத்தில் ஏழுதாளர் அவளின் புகழ் பாடுகிறார். அடுத்த பாகத்தில், அவள் வளர்ந்த முறை பற்றி கூறுகிறார். அவள் உலகின் மிக உயரந்த கட்டிடங்களை எழுப்பியுள்ளாள். அவளின் வெற்றி பாதையின் சரித்திரம் நோக்கி கதை செல்கிறது.
இந்த வாரம் மேத்தா பட்கரின் போராட்டத்தைக் கண்டு வியக்கிறேன். பல ஆண்டுகளாக மத்திய அரசு மறந்துவிட்ட ஆணையை, இன்றும் அஹிம்சை முறைப்படி போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளார். மேத்தா அவர்களின் மனவலிமை வியக்கவைகிறது.
பெண்கள், ஆண்களை விட மனவலிமை அதிகம் பெற்றவர்கள். இது அறிவியலில் கூட உறுதி படுத்தியுள்ளனர். பெண்களின் முடிவு-திறன் (Decision-Making), ஆண்களை விட சிறப்பானது.
ஆண்கள் எடுக்கும் முடிவைவிட பெண்களின் முடிவு சிறப்பனதாக இருப்பதை கண்டு உள்ளேன். அவர்கள் மிக துரிதமாக முடிவேடுக்கின்றனர். ஆண்களை விட பெண்களுக்கு மன வலிமையை இயற்கை அளித்துள்ளது. பல பெண்கள், ஆண்களின் சரித்திரத்தையே மாற்றியுள்ளனர்.
எனக்கு ஒரு நண்பர் இருந்தார். ஒரு முறை அவரது வாழ்க்கையை கேக்க நேர்ந்தது. அவரின் வெற்றிக்குப்பின் அவரது காதலி (தற்போது மனைவி) இருந்தார். அவரது எல்லா தோல்வி கற்களையும் வெற்றிதூணாக மாற்றியதை கேட்டு வியந்தேன்.
இந்த வாரம், சில சுட்ட (திருடப்பட்ட) நகைச்சுவை,
பெண் ஸ்பின் பௌலரோட பெயர் என்னவோ? - "பால திரிபுர சுந்தரி"
ஷார்ட் சர்க்யூட்டுக்கும் பொறாமைக்கும் என்ன ஒற்றுமையோ? - "வயர் (wire) எரியும்"
கடியுடன்,
ஸ்ரீதர்
0 Comments:
Post a Comment
<< Home