இந்த வாரம் சில துயரமான சம்பவங்களின் கோர்வை கடந்த சில வாரங்களில் சிலரின் மறைவு என்னை துக்கத்தில் நிறுத்தியது.
எனது கல்லூரி காலங்களில் நான் வேதத்திரி மகரிஷி மன்றத்தில் தியானம் கற்றேன். என்னுடைய சோதனை காலங்களில் அது அறுதலாக இருந்தது. மனதை ஒரு நிலை படுதுவதின் முலம் காணும் விந்தையை கண்டேன். அவரின் புத்தகங்கள் மற்றும் குறிப்புகளை சேகரித்தேன். அந்த சில மாதங்கள் என்னுடைய வாழ்க்கை பாதையை காட்டியது.
மகரிஷி சென்ற மாதம் இயற்கை எய்தினார். ஒரு நண்பனின் மடலின் முலம் இதை தெரிந்து கொண்டேன். அவரின் சில குறிப்புகளை இன்றும் தொடர்ந்து வருகிறேன்.
இந்த வேகமான வாழ்க்கை முறையில் தியானம் மற்றும் யோகா அறிவியல் கற்பது கட்டாயமாகிறது. தியானம், அறிவியலில் ஒரு பாகமாக கருதுகிறேன். அதை தியானம் கற்றவரே அரிய முடியும். நான் பல நண்பர்களை மன்றத்தில் சேர்த்துள்ளேன். ஒரு முறையாவது ஆழியாறு சென்று மகரிஷியை சந்திக்க வேண்டும் என இருந்தேன். அது இறுதியில் முடியவில்லை.
இந்த அமைப்பின் வலை முகவரி,
http://www.vethathiri.org/tamil
வாழ்க வளமுடன்,
ஸ்ரீதர்
0 Comments:
Post a Comment
<< Home