May 25, 2006

வலையில் விழுந்தது !!! -- எழில்முதல்வனின் கவிதை

தனியே விடு, என்னைத் தனியேவிடு
அழவேண்டும் நான் என்னைத் தனியே விடு

பெருஞ்சுமை நெஞ்சில் கனக்கிறது-ஒருபிரளயம் என்னுள் நடக்கிறது
நெருஞ்சியின் மேலே நடப்பது போல-என் நினைவுகள் என்னை வதைக்கிறது.

உடம்பே வாயாய் அழவேண்டும்-நான் 'ஓ' வென்றலறி விழ வேண்டும்
வடிகால் தேவை-இலையென்றால் இவ்வாரிதி எனை விழுங்கி விடும்.

ஊற்று மணற்கரை போல்-மனம்
உருகி நெகிழ்ந்திட வேண்டும்
நீற்றுத் துகளெனத் துன்பம் நீங்கிப்
பொடிந்திட வேண்டும்
வெந்த பசும்புண் போலே-இதயம்
இந்த அழுகையின்றி-மருத்துவத்தால்
ஏதும் பயனுண்டோ-தனியே விடு என்னை

ஒற்றைச் சிறிய கிளை -
முற்றி உடைந்த பலாப்பழத்தைப்
பற்றியே தாங்கிடுமோ?
இற்று முறிந்திடுமோ?
தளைகளை விட்டு நான் விடுபட வேண்டும்
தாங்கும் சுமைகளை இறக்கிட வேண்டும்

2 Comments:

At July 12, 2006 3:53 AM, Anonymous Anonymous said...

read and send ur commends

 
At July 28, 2006 2:36 AM, Blogger tamil said...

//தனியே விடு, என்னைத் தனியேவிடு
அழவேண்டும் நான் என்னைத் தனியே விடு

பெருஞ்சுமை நெஞ்சில் கனக்கிறது-ஒருபிரளயம் என்னுள் நடக்கிறது
நெருஞ்சியின் மேலே நடப்பது போல-என் நினைவுகள் என்னை வதைக்கிறது.//

எனக்குள்ளும் இப்படி ஓர் உணர்வு சிலசமயங்களில் ஏற்படுகிறதே.

 

Post a Comment

<< Home