All the world's a stage
நானும் ஒவ்வோரு வியாழக்கிழமை தோறும் துகள் எழுத வேண்டும் என்று அசைப்படுகிறேன். ஆனால் அது கடந்த வாரம் தவறிவிட்டது. எனது வலைப்பக்கங்கள் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளேன். அம்மா நான் எல்லா விஷயத்திலும் மிக பிடிவாதமாக இருகிறேன் என்று திட்டுவார். ஆனால் எனது நண்பர்கள் அப்படி சொல்வதில்லை. சில நெருங்கிய நண்பர்கள் உடன் பிடிவாதமாக இருந்திருகிறேன்.
எல்லா மனிதர்களுக்கும் ஒரு முகம், பல முகமூட்டிகள் உண்டு. இராவணன் போல மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். நண்பர்கள் ஒரு முகம், வீட்டில் ஒரு முகம், பணியிடஙகளில் ஒன்று இப்படி பல முகம். இந்த சமுதாயதிற்காக நாம் பல முகமூட்டிகளை மாற்ற வேண்டும். ஆனால் பலர் இந்த முகமூட்டிகளை பல முறை மாற்றி தங்கள் உண்மையான முகத்தை மறக்கின்றனர்.
"All the world's a stage" என்பது போல் எல்லோரும் இங்கு நடிகின்றோம்.
கடந்த சில வாரங்களாக தலைநகரில் நடந்து வரும் தீவிர இட ஒதுக்கீடு போராட்டம் அதிர்ச்சியாக உள்ளது. நான் எந்த பக்கத்திற்க்கும் பரிந்து பேசுவதில்லை. முடிந்த வரை சமத்துவமாக ஏழுத போகிறேன்.
மருத்துவர்கள் போராட்டதினால் நோயாளிகள் படும் வேதனையை தொலைக்காட்சியில் (NDTV) கண்டேன். அதில் ஒரு வயது குழந்தைக்கு இடது கண்ணில் அடிப்பட்டு தையல் போடிருந்தனர். அதை சுத்தம் செய்து மறுபடி போட வேண்டும். அதற்கு மருத்துவர்கள் இல்லாமல் அழும் காட்சி மனதை கலங்கவைத்தது.
இந்த போராட்டதிற்கான காரணம் எனக்கு சரியாக புரியவில்லை. NDTV நடத்திய கருத்து கணிப்பின் முடிவில் 88% பேர் இட ஒதுக்கீடு வேண்டாம் என்றும், 12% பேர் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் பதிலளித்து உள்ளனர். எனது கணிப்பு சரியானால், 88% மேல் வகுப்பை சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு வேண்டாம் என்றும், 12% பேர் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் ஒட்டளித்து உள்ளனர். இதிலிருந்து 88:12 என்ற விகித்ததில் ஒரு ஆங்கில தொலைக்காட்சியை பார்த்து, செல்பேசியை பயன்படுத்தி ஒட்டளிக்க திறன் பெற்றவர்களாக உள்ளனர். வகுப்பை வைத்து இட ஒதுக்கீடு முறை அமைவது விரும்பதகாதது. ஆனால் அதற்கு முன் நம் கல்வி முறை மாற்றப்பட வேண்டும். கல்வி தற்பொழுது வியாபாரமாக இருக்கிறது. தரமான கல்விக்கு விலை தந்து வாங்கவேன்டியுள்ளது. இது மாறினால் ஒழிய இட ஒதுக்கீடு கட்டயமாகிறது.
இந்த போராட்டம் மீருகத்தனமானது என நினைகின்றேன். ஒரு உயிர் மற்றொரு உயிர் வருந்துவதைக்கண்டு வேடிக்கை பார்க்காது. ஆனால் இன்று மாணவர்கள், மருத்துவமனையின் வாசலில் நோயாளிகள் செல்லவிடாமல் போராட்டம் செய்கின்றனர். இவர்கள் படித்தப்பின் மக்களுக்கு சேவை செய்வது கேள்வியாகிறது. நாளை இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய மாட்டேன் என்று கூறவும் வாய்ப்பிருகிறது. மருத்துவம் ஒரு தொழில் அல்ல, அது மக்கள் சேவை. ஒவ்வோரு மருத்துவரும் படித்தபின் சமுதாயதிற்காக சேவை செய்ய உறுதிமொழி எடுக்க வேண்டும். இனி அது தேவையிருக்காது.
மிகவும் வருத்ததுடன் எழுதிவிட்டேன். சரி இப்பொழுது ஒரு கீதா அக்காவின் வலைப்பக்கத்திலிருந்து ஒரு இணைப்பு. அவரது முதல் திருமண நாள் நினைவுகளை கடந்த வாரம் பகிர்ந்து கொண்டார்.
http://sivamgss.blogspot.com/2006/05/2_16.html
நட்புடன்,
ஸ்ரீதர்
0 Comments:
Post a Comment
<< Home