June 09, 2006

வலையில் விழுந்தது !!! -- குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கைத் தவறி விழும் முன் சொன்னேன்
"Sorry" தாத்தா என்று ...!

தூங்கும் பொழுது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
"Thanks" ம்மா என்று ...!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
"Happy Birthday da" என்று ... !

காலையில் நாளிதழ் படிக்கும் போது எதிர் விட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் - முந்திக் கொள்வேன்
"Good Morning Uncle" என்று ...!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநெகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் - முடித்துக் கொள்வேன்
"Hai" என்று ...!

மாலையில் கடற்க்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
"I Love You" என்று ...!

இரவில் ...
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் ...!
"Amma" அம்மா என்று அலறினேன் ...
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

http://en-kavithai.blogspot.com/2006/06/blog-post.html

2 Comments:

At August 03, 2006 12:37 AM, Anonymous Anonymous said...

Fantastic..... sorry.... mannikkavum.... romba arumai...

I will start writing in the tamil blog quite soon....

 
At April 08, 2008 7:16 AM, Blogger சேதுக்கரசி said...

அட நம்ம ரசிகன் ஸ்ரீதரா? உங்களோட இன்னொரு வலைப்பூவா இது? இந்தக் கவிதை எனக்கு இன்னிக்கு மின்னஞ்சலில் வந்தது, வேற யாரோ அவங்க வலைப்பூவில் போட்டிருக்காங்க எழுதியவர் பேர் போடாம! இதை எழுதினது பழனி (பழனிவேல்). பழனியின் வலைப்பூ சுட்டி கொடுத்திருக்கீங்க.. நன்றி. பழனியும் அன்புடனில் இருக்கார்.

 

Post a Comment

<< Home