June 09, 2006

June 09, 2006



என் சிறு வயதில் சின்ன செடிகளை வைத்து விளையாட பிடிக்கும். என் பள்ளிக்கால நண்பனின் தந்தை எங்களது பள்ளியருகே உரக்கடை வைத்திருந்தார். அவன் என்னக்கு நெருங்கிய நண்பன். அதனால், கடைக்கு வரும் புதுரக விதைகளை எடுத்து வருவான். எங்கள் பள்ளியில் ஒர் முலையில் அதனை வளர்ப்போம்.

விதையை முதலில் சுத்தம் செய்து, அதை இட தகுந்த இடம் தேடுவோம். பின்னர் அதனை மண்ணில் புதைத்து சரிப்பார்போம். அவனுக்கு இதில் PHD முடித்தவன். நான் அவன் சொல்வதெல்லாம் செய்வேன். எனது 'water bag' ல் தண்ணர் கொண்டுவந்து முளைகளுக்கு எல்லாம் உத்துவேன். ஒவ்வொரு நாளும் அந்த விதையை சுற்றியே எங்கள் நினைவுகள் இருக்கும்.

ஒரு நாள் அந்த விதை மண்ணில் இருந்து எழும். அன்றிரவு எதோ சாதித்த மாதிரி மகிழ்ச்சியாக இருக்கும். அந்த பள்ளிக்காலம் முடிந்தப்பின், நான் பதினோரம் வகுப்பு அதேப்பள்ளியில் சேர்ந்தேன். எனது முதற்ப்பாடமாக கணினியை எடுத்தேன். 'ரோஜா' படம் பார்ததில் இருந்து கணினி மீது ஒரு காதல். அதனால் அதன் மீது அதிக கவனம் செலுத்தினேன். நான் எழுதும் ஒவ்வொரு 'Program' க்கும் உயிர் இருப்பதாக எண்ணினேன்.

கண்ணதாசனின் ஒரு பாடல் வரியில், 'கவிதைகள் படைப்பதால் கடவுள் ஆகிறேன்' எனக்கூறுவார். நானும் 'Program' மைப்படைப்பதால் இறைவனாகிறேன் என்றேன். எனது நண்பர்களுக்கு சுத்தமாக புரியவில்லை.

எனது 'Program'கள், 'Cyber' உலகில் உயிருடன் இருப்பதாக இன்றும் எண்ணுகின்றேன். அதனால் நான் கடவுள் ஆகிறேன். கடவுள் தனது படைப்பில் எப்பொழுதும் தவறு செய்வதில்லை. இப்படி எண்ணும் போது எனது வேலையில் தவறு செய்ய விருப்பம் இல்லை.

கடந்த ஒரு வாரமாக ஒரு ' Production Environment' டை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளோம். இது 'Mainframe' கணினிக்கு உயிர் கொடுப்பதாகும். 'Mainframe' என்பது மிகப்பெரிய 'Super Computer' அல்ல. அனால், தற்பொழுது சந்தையில் இருக்கும் கணினிகளில் பெரியது. சரியாக சொல்லாம் என்றால், இந்தியாவின் பொருளாதாரம் இந்த கணினிகளில் ஒடிக்கொண்டு இருக்கிறது எனலாம். இந்த வேலை தொடர, நான் ஒரு அழகிய விதை, செடியாக வளர்வதை உணர்கிறேன். கணினி உயிர்ப்பெற்று கண் சிமிட்டும் நேரம் ஒரு மலர்ச்சி தெரிகிறது. இதற்க்காக 8 மாதங்கள் காத்திருந்தேன்.


'Bahrain' சாப்பாடு அழுத்துவிட்டது. சிக்கிரம் வீடு திரும்பி அம்மா, அண்ணி சமையலை குறை சொல்ல வேண்டும்.

தமிழ் இனையத்தில் வளர்வது வியப்பாக உள்ளது. இந்த வாரம், தமிழ் 'wikipedia' தளத்தை பார்த்தேன். அது தமிழ் 'Encyclopedia' போல இருந்தது.

என்னால் இப்பொழுது தமிழிலேயே தெடுச்சொற்களை தட்டச்சு செய்ய முடிகிறது. தமிழை யாராவது ஒருவர் எந்த காலத்திலும் வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்.

அவலுடன்,

ஸ்ரீதர்

1 Comments:

At August 03, 2006 12:55 AM, Anonymous Anonymous said...

Sridhar,
you can prepare 'uppuma' with aval. Just kidding. I am reading all of your blog entries and the style is good. Keep it up.

 

Post a Comment

<< Home