June 15, 2006

June 15, 2006இந்த வாரம் மென்பொருள் துறையில் நடைமுறையில் உள்ள சில பழக்கங்களை எழுத போகிறேன். மென்பொருள்கள் பல வகையாக பிரிக்கலாம். அதில்

1. பயனாளர் சாரத மென்பொருள் (Generic Software)
2. பயனாளர் சார்ந்த மென்பொருள் (Customized Software)

முதல் வகை மென்பொருள், ஒரு குறிப்பிட்ட பயனாளர் சாராமல், எல்லோரும் பயன்படுத்த இயல்பாக அமைந்திருக்கும். இரண்டாவது ஒரு பயனாளரின் தேவைக்கு எற்ற மாதிரி அமைந்திருக்கும். முதல் வகைக்கு எடுத்துக்காட்டாக Microsoft' ன் சில மென்பொருள்களை சொல்லலாம்.

மென்பொருள் வாழ்க்கை சுழற்சி (SDLC) என்பது ஒரு மென்பொருள் முதற்க்கட்ட ஆய்வு முதல் அதன் இறுதிக்காலம் வரை வரையறுப்பதாகும். இந்த சுழற்சி சில மாதங்கள் முதல் பல வருடங்கள் வரை செல்லும். இந்த சுழற்சியில் மென்பொருள் வெகுவாக செதுக்கப்பட்டு பின்னர் வெளியிடப்படும்.

இந்த சுழற்சியின் ஒரு கட்டமாக மென்பொருள் பரிசோதனை காலம் வரும். மென்பொருள் உருவாகும் போது ஏற்படும் தவறுகளை கண்டுப்பிடித்து திருத்துவதாகும். இது மிக முக்கிய காலமாக மென்பொருள் வாழ்க்கையில் கூறிப்பிடுவர். இந்த பரிசோதனை காலம் முன்று வகைப்படும்.

1. செயல்ப்பாடு பரிசோதனை (Functional Testing)
2. செயல்த்திறன் பரிசோதனை (Non-Functional Testing)
3. பயனாளர் பரிசோதனை (End-User Testing)

ஒவ்வொறு காலத்திலும் மென்பொருள் சிராக பரிசோதிக்கப்பட்டு பின் உற்பத்திக்கு (Production) அனுப்பிவைக்கப்படும். இப்படி உற்பத்தியில் இருக்கும் போது ஏற்படும் தவறுகளை போக்க அவ்வப்போது சிர் துண்டுகள் (Patches) வெளியிடப்படும். Microsoft இது போல பல துண்டுகளை எல்லா மாதமும் வெளியிட்டுக்கொண்டே இருக்கும். நிங்கள் கேட்பது புரிகிறது. ஒழுங்காக பரிசோதனை செய்தால் எதற்க்கு சிர் துண்டுகளை வெளியிட வேண்டும்?.

தற்பொழுது உள்ள எந்த மென்பொருளும் தவறே இல்லை எனக்கூற இயலாது. எல்லா மென்பொருளும் அதன் பரிசோதனை காலதிலிருந்து தப்பின தவறுகளுக்கு சிர் துண்டுகள் கொண்டே சரி செய்ய இயலும். அதனால், மென்பொருள் வாழ்க்கை சுழற்சியில் 'மென்பொருள் பராமரிப்பு' என்று ஒரு காலமும் உண்டு.

இதை எல்லாம் நான் எதுக்கு எழுதினேன் மட்டும் யோசித்து பாத்திங்கனா ஒரு உண்மை தெரியும். இவ்வளவு கஷ்டப்பட்டு பன்ற மென்பொருள் இவ்வளவு தவறுகள் இருக்குதுனா, என்னோட துகள் (Blog) ல ஒரு சில சொல் தவறுகள் இருப்பதில் என்ன தப்பு? எல்லா தடவையும் நான் இரண்டு தரம் பிரசுரிக்கிறேன். எனது பதிவிற்க்கு வருபவர்கள் எல்லாம் என் துகளை சொற்ப்பரிசோதனை செய்கின்றனர்.

இந்த துகளில் தவறுகள் குறைந்திருக்கும் என்று எண்ணுகின்றேன். சரி இந்த வாரம் இனைய முகவரி,

http://www.indlinux.org/

இங்கிருந்து தமிழ் லினக்ஸ்சை பதிவிறக்கம் செய்யலாம். இந்த லினக்ஸ் பதிவு மிக தொடக்க நிலையில் இருந்தாலும் அவர்கள் எடுத்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியது. இது போது பயனாளர்களுக்கு சிக்கிரமே கிடைக்கும் என நம்புகிறேன்.

எனது விட்டில் கனிணி வந்த முதல் நாள், அப்பாவை அழைத்து அமர வைத்தேன். அவரிடம் சுட்டியை (Mouse) கொடுத்து இயக்க வைத்தேன். அப்பா எல்லாம் ஆங்கிலத்தில் இருந்ததை பார்த்து தமிழில் வேண்டும் எனக்கேட்டார். அதற்க்கு நான் பெருமையாக 'அதுக்கென்ன எழுதிட்டா போதும்' என்றேன். இன்று வரை அப்பா நான் தமிழில் இயக்க சுழலை தருவேன் என கனிணி பயிலாமல் காத்திருக்கிறார். அப்பாவுக்கு தன் மகன் பெரிய 'Bill Gates' னு நினைப்பு. நான் பட்ற கஷ்டம் யாருக்கு தெரியும். இந்திய திரும்பினதும் இதைப்போட்டு பந்தா பண்ண வேண்டும்.

முக்கிய அறிக்கை:


எனது நண்பர் திரு. ராஜேஷ் கண்ணன் அவர்கள் என்னிடம் 'முல்லா கதை' கேட்பதாக வாக்களித்து விட்டு, இன்று வரை தலைமறைவாக உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் கதை கேட்காவிட்டால் என்னுடைய அடுத்த பதிவில் அக்கதை பரசுரிக்கப்படும் என்று வன்மையாக எச்சரிக்கின்றேன். உலக நலன் கருதி அவர் என்னிடம் கதைக்கேட்க வேண்டும்.

பின் குறிப்பு:


இந்த துகளின் நான் மொழிப்பெயர்த்த வார்த்தைகள் எல்லாம் எங்கிருந்தும் எடுக்கப்படவில்லை. இதற்க்கு தகுந்த வார்த்தைகள் இருந்தால் அனுப்பவும்

Testing - பரிசோதனை (Blood Testing லிருந்து எடுக்கப்பட்டது)
செயல்ப்பாடு பரிசோதனை - Functional Testing
செயல்த்திறன் பரிசோதனை - Non-Functional Testing
பயனாளர் பரிசோதனை - End-User Testing

சிர் துண்டுகள் - Patches
Software Development LifeCycle - மென்பொருள் வாழ்க்கை சுழற்சி
Production - உற்பத்தி
Blog - துகள் (Logging Bits - Blogs)

இறுதியாக,

Rose flower little rose flower,
a rose flower which says my name,
swaying in the breeze alone,
with only your songs for a companion

பூக்களுடன்,

ஸ்ரீதர்

1 Comments:

At June 16, 2006 6:03 PM, Anonymous Anonymous said...

தமிழுக்கு சேவை செய்யும் உங்களுக்கு என் நன்றி.

 

Post a Comment

<< Home