தமிழ் மாதங்கள் -- ஒரு பார்வை

இந்த வாரம் ஒரு புதிரோட ஆரம்பிக்கலாம்.. இந்த தமிழ் மாதங்களை வரிசைப்படுத்துங்கள்.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, ஐப்பசி, மார்கழி, மாசி, தை, பங்குனி
இதற்க்கான விடை இப்பதிவின் இறுதியில்....
இந்த வாரம் என்னை ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சியை தந்தது. அது முன்னாள் இந்திய கால்பந்தாட அணியின் தலைவர் வி.பி. சத்யனின் மரணம். அவரை நான் சில முறை சந்தித்து இருக்கிறேன். என் பள்ளிக்காலங்களில் அருகாமையில் நடக்கும் கால்பந்து போட்டிகளில் தலைமையேற்ப்பார். எனக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் இருந்த காரணத்தினால் அவரை பற்றின செய்திகளை சேகரித்தேன்.
அவரின் தற்கொலை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு விளையாட்டு வீரரின் முடிவு இப்படி அமைந்துவிட்டது வேதனைக்குரியது. இச்செய்தியை ஒரு இந்திய ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் வாசித்தார்கள். அந்த செய்திக்குப்பின் 'Cricket Controveries' என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பினர். அந்த நிகழ்ச்சியில், கிரிகெட் வீரர்கள் விருந்து விழாக்களுக்கு செல்லும் போது எந்த மாதிரி உடையணிய வேண்டும் என்று ஒரு மணி நேரம் வாதிட்டார்கள். இதற்க்கு ஒரு 'Fashion Designer' மற்றும் இரண்டு முன்னாள் கிரிகெட் வீரர்கள் கருத்து மோதலில் ஈடுப்பட்டனர்.
வினை எங்கே உள்ளது என அப்போது புரிந்தது. ஒரு பகுதியில் பல விரர்கள் நல்ல பயிற்சியில் ஈடுப்பட பணமில்லாமல் ஒதுங்குகின்றனர். மறு சாரர் சேர்த்த பணத்தை எப்படி செலவளிப்பது என தெரியாமல் வாதடுகின்றனர். தவறு வேறு எங்கும் இல்லை. நம்மிடம் தான் உள்ளது. நாம் தான் கிரிகெட் வீரர்களை கடவுளாக பார்க்கும் உயர்ந்த எண்ணம் உடையவர்கள். நான் படிக்கும் காலத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டி நடந்தால் அன்று அரசாங்கம் விடுமுறை அளிக்கும். இப்படி அரசங்கமே துக்கிவிட்ட விளையாட்டு, கிரிகெட். கால்பந்து விளையாடுபவருக்கு அதன் அருமை தெரியும். 150 கோடி பேர் இருக்கும் ஒரு நாட்டில், 15 பேர் கொண்ட ஒரு கால்பந்து அணியை உருவாக்க முடியவில்லை என்பது வெட்கத்துக்குரியது.
கால்பந்து நிலைமை இது என்றால் நம் தேசிய விளையாட்டு இன்னும் சிதைந்திருக்கிறது. பலருக்கு நம் தேசிய விளையாட்டு எது என்பதே மறந்திருக்கும். அதில் இருக்கும் அரசியல் அனைவருக்கும் வெளிச்சமானது. மத்திய அரசாங்கம் எடுக்கும் தெளிவான முடிவுதான் இதனை மீண்டும் உயிர்ப்பிக்கும்.
சரி மேலே இருக்கிற புதிருக்கு வருவோம். நான் கடந்த முறை அம்மாவுக்கு போன் செய்தபோது, தாத்தாவும் ஆச்சி (பாட்டி, நாங்கள் இப்படி அழைப்பது வழக்கம்) ஆடி முடிந்து ஆனியில் சென்னை வருவதாக கூறினார். எனக்கு ஆடித்தள்ளுப்படி தெரியும் ஆனால், இங்கு இருப்பதினால் அதுவும் மறந்துவிட்டது. அசட்டுத்தனமாக அம்மாவிடமே கேட்டுவிட்டேன். அப்புறம் எனக்கு புரிகின்ற மாதிரி ஆங்கில மாததில் கூறினார். சரி, இங்கே என்னை மாதிரி எத்தனை பேர் இருக்காங்க ஒரு கணக்கெடுப்பு. சரி புதிருக்கான விடை இதோ...
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி
இந்த மாததில் பல உண்மைகள் அடங்கியிருக்கின்றன. தமிழ் மாதங்கள் சூரியனின் சுற்றுப்பாதையில் மையமாகக்கொண்டு கணக்கிடப்படூகின்றது. 12 மாதங்கள் 12 ராசிகளைக் கூறுகிறது. ஜோதிடசாஸ்த்திரத்தில் இதை பன்னிரண்டு கட்டங்களில் அல்லது வீடுகள் என வரையருப்பர். ஒவ்வோரு வீட்டிலேயும் சூரியன் ஒரு மாதம் இருக்கும். இதனை கணக்கிட்டே மற்ற கீரகங்களின் நிலையை நிர்ணயம் செய்யப்படுகின்றது. கல்லூரிக்காலங்களில் வானியல் படிக்கும் ஆசையில் சிறிது ஜோதிடமும் பயின்றேன். நமது முன்னோர்கள் விட்டு சென்ற அரிய கலை இந்த வானியல் சாஸ்திரமாகும். இப்போது விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் பல விஶயங்கள் நம் சாஸ்த்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜோதிடம் ஒருவரின் காலத்தை சொல்கிறதோ இல்லையோ ஆனால் பல ரகசியங்களை உள்ளடக்கியது.
- மாதம் - இராசி
1 சித்திரை - மேடம்
2 வைகாசி - இடபம்
3 ஆனி - மிதுனம்
4 ஆடி - கர்க்கடகம்
5 ஆவணி - சிங்கம்
6 புரட்டாசி - கன்னி
7 ஐப்பசி - துலாம்
8 கார்த்திகை - விருச்சிகம்
9 மார்கழி - தனு
10 தை - மகரம்
11 மாசி - கும்பம்
12 பங்குனி - மீனம்
சரி எப்படி இந்த ஆடித்தள்ளுபடி வந்தது என யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் பின்னூடத்தில் இட மறவாதீர்கள்.
நட்புடன்,
ஸ்ரீதர்
பின்குறிப்பு: சில கருத்துக்கள் wikipedia விலிருந்து எடுக்கப்பட்டது.
5 Comments:
மிக கடினமான விஷயத்தை தெளிவாகவும் அழகாகவும் கூறியதற்க்கு வாழ்த்துக்கள்.
நம்பி,
உங்கள் வருகைக்கு நன்றி .. என் பதிவுகள் தெளிவாக இருக்கிறது என முதல் முறை நீங்கள்தான் சொல்றிங்க.. நன்றி..
ஸ்ரீதர்
ஆடியில் எந்த விசேஷமும் நடக்காது. ஆடியில் கூடினால் சித்திரை கத்திரி வெயிலில் பிள்ளை பிறக்குமாம், அது தாயுக்கு சிரமம்.
விசேஷமில்லாமல் வியாபாரம் நகருமா அதான் ஆடி தள்ளுபடின்னு ஒன்றை உருவாக்கி லாபத்தை கூட்டிக் கொள்கிறார்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி ஜெஸிலா,
ஆடி மாசம் கழிச்சி வர மாசங்கள் எல்லாமே பண்டிகை மாசங்கள். தீபாவளி, கிருஸ்துமஸ், பொங்கல். அப்புறம் ஆவணி, தை, மாசி எல்லாம் கல்யாண மாசம். மார்கழில கூட சில பிரிவினர் கல்யாணம் பண்ணுவாங்க. அதனால, கடந்த வருஷம் வாங்கி வச்ச சரக்க இப்படி ஆடித்தள்ளுபடியல குறைந்த விலைக்கு வியபாரம் பண்ணிட்டு, வர போற பண்டிகைக்கு புது சரக்கு வாங்க போவாங்க. இன்னும் புரியும் படி சொன்னா "Clearence Sale". அவ்வளவு தான்.
இது சில நுறு வருஷமா பழக்கத்திலிருக்கிற ஒன்னு. இப்போ நமக்கு 'Shopping' வாரத்தில ஒரு தடவையாவது போறோம். அதனால நமக்கு எதுவும் புதுசா தெரியல. இத சாக்கா வைச்சிக்கிட்டு துணிக்கடைங்க விலையக் கூட்டி அப்புறம் குறைவா விக்கிறாங்க.
சென்னையிலே ஒரு பெரியக்கடை ஆடி மாசம் அரம்பிக்கிற ஒரு வாரத்துக்கு முன்னாடி, கையிருப்பு சரக்குல புதுசா 'Print' அடிச்ச விலை ஒட்டி கடைக்கு அனுப்புறாங்க. அதுக்கப்புறம் அதுல இருந்து 20 - 40 % வரைக்கும் தள்ளூபடி பண்றாங்க.
சரி இதெல்லாம் எப்படி தெரியும்னு மட்டும் கேக்காதிங்க..
என்னவோ கடைசியிலே ஏமாற போறது நாமதான். எங்க விட்டிலே போனவாரம் தான் 'T-Nagar' போய்ட்டு ஆடி "Purchase' முடிச்சிட்டு வந்தாங்க. அப்போ உங்க வீட்டுல??
- ஸ்ரீதர்
This comment has been removed by a blog administrator.
Post a Comment
<< Home