July 26, 2006

The Matrix -- ஒரு தேடலின் கதைகடந்த வாரத்தில் ஒரு அருமையான ஆங்கில படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான படம் என சொல்வதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. படத்தில் சொல்ல வந்த கருத்துக்கள் அனைவருக்கும் புரிந்து, அதை இயக்குனர் வியக்கும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

2. படம் எதைப்பற்றியது என்றே புரியாமல், ஆனால் காட்சிகள் செய்யும் மாயாஜாலத்தை கண் இமைக்காமல் பார்க்கும் படி அமைந்திருக்க வேண்டும். (இன்னும் சொல்லனும்னா பட்டிக்காட்டான் முட்டாய்க்கடைய பாக்குற மாதிரி).

ஆங்கில படம் பாக்கும் போது நான் எப்போதுமே இரண்டாவது ரகம் தான். யாரையாவது பக்கதில ஒக்கார வச்சிக்கிட்டு கதை கேட்டுக்கிடே இருப்பேன். ஆனா இந்த தடவை அப்படி செய்ய முடியலை. யாருக்குமே புரியாத மாதிரி எடுத்து வைச்சிருக்காங்க.

எல்லாம் நம்ம "The Matrix" படத்த பத்தி தான் சொல்றேன். எத்தனை தடவைப்பார்த்தாலும் புரியாத புதிராகவே இருக்குது. எதோ எனக்கு புரிஞ்சத உங்களுக்கு சொல்றேன்.

படத்துல 'Neo' னு ஒரு கதாநாயகன். நம்ம சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் எல்லோரையும் போல சும்மா பறந்து பறந்து அடிப்பார். அவருக்கு ஒரு ஜோடி 'Trinity' னு பேரு. இவங்க இரண்டு பேரும் சேந்தாங்கனா, சும்மா கில்லி மாதிரி 'Blazer' ல வர வில்லனுங்கல பந்தாடுவாங்க. அப்புறம் இந்த படத்துல, சாரை சாரையா இயந்திர சிலந்தி பூச்சி வரும். இந்த சிலந்திங்க நம்ம மக்களை ரொம்ப இம்சிக்கும்.

படத்தோட முதல் பாகத்தில், நம்ம 'Neo' வ வந்து இன்னோரு உலகத்துக்கு தொலைபேசி மூலமா கொண்டு போவாங்க. அங்க 'Neo'க்கு பறக்குறதுக்கு, சண்டைபோடுறதுக்கேல்லாம் சொல்லி தருவாங்க. அப்புறம் நம்ம கதாநாயகன் தனி ஆளா எல்லாரையும் காப்பத்துவார். இன்னும் கொஞ்சம் கதைக்குள்ளே போனா, நாம இருக்கிற உலகமே ஒரு இயந்திரங்களால் உருவாக்கினது என்றும், நமது விதி இந்த இயந்திரங்க கணினியில பண்ற மாதிரி 'Program' பண்ணியிருக்குதுனு சொல்லவறாங்க. அப்படியே தலை ஒரு அடி மேலே எறி சுத்துற மாதிரி இருக்குது.

மனிதன் தோன்றிய காலம் முதலே இந்த மாதிரி கருத்துக்கள் இருந்து வருகிறது. நாம் எல்லோரும் காலத்தின் அடிமைகள் என உணர்கின்றோம். இப்படத்தில் ஒரு காட்சியில், 'Neo' ஒரு டீக்கடையை (அதாங்க நம்ம 'Coffee Shop') பார்த்து அங்கு உணவு சுவையாக இருக்கும் என்று கூறுவார். உடனே அருகிலிருப்பவர் "நாம் சுவை என்னும் உணர்ச்சியால் அடிமைபட்டிருகிறோம்" என்பார். சிறிது சிந்தித்தால், நமக்கு இறைவன் தந்திருக்கும் ஐந்துபுலன்களே, நம்மை அடிமையாக்கி உள்ளது என்பதை அறியலாம். 'Shakesphere' இந்த உலகம் ஒரு நாடக மேடை எனக்கூறினதை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம். மனிதன் "நான் யார்?" எனக்கேள்விகளுக்கு இந்த மாதிரி விசித்திர விடை பதிலாக கிடைக்கின்றது. அனைத்திற்க்கும் மூலக்காரணமாக இந்த கேள்வி அமைகின்றது.

"நான் யார்" என்ற கேள்விக்கு பலரும் பல விதமாக பதில் தேடுகின்றனர். ஆத்திகர், இறைவனிடம் சென்று கேட்கிறார். விஞ்ஞானி, பூமியை குடைந்தும், வின்மீன்களை எண்ணியும் அராய்கிறார். ஞானி தனக்குள்ளே தேடுகின்றார். விடை கிடைத்ததோ இல்லையோ, ஆனால், தேடல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒரு பாடல் வரியில், கவிஞர் இப்படி கூறுவார்,

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்..
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்.."

உயிருள்ள வரை தேடல் தொடர்ந்திருக்கும்.

ஒரு நாள் இரவு, தூங்குறதுக்கு முன்னாடி இதைப்பற்றி யோசித்துப்பாருங்க.. விடை வருதோ இல்லையோ நல்லா தூக்கம் வரும்.

நீங்க ரொம்ப பொருமைசாலி தான்.. இது வரைக்கும் படிச்சிடிங்களே.. சரி அப்படியே இதுக்கும் ஒரு விடை சொல்லிட்டு போங்க..

ஒரு ஊருக்குள்ளே இரண்டு ரயில் பாதைகள் இருக்கு.. ஒன்னுல ரயில் எப்போதுமே போகாது.. இது அந்த ஊர்ல இருக்கிற எல்லோருக்குமே தெரியும். ஒரு நாள், சில பள்ளிக்கூடத்து பசங்க அந்தப்பக்கமா விளையாட போனாங்க. ஒரு பையன் மட்டும், அந்த இயங்காத ரயில் பாதைல விளையாட ஆரம்பிச்சான். மிச்சமிருந்த 6-7 பசங்க, ரயில் போகும் பாதையிலே விளையாட அரம்பிச்சாங்க.

அந்த சமயம் பார்த்து ஒரு ரயில் அந்தப்பக்கமா வருது. இத, அந்த பாதைல தூரமா இருக்கிற 'Line man' கவனிச்சிட்டான். அவனால ஓடிபோய் கத்த முடியாது. பசங்க ரொம்ப தொலைவுல இருக்காங்க. இப்போ 'Line man' கிட்ட ஒரு 'Gear' இருக்குது. அந்த 'Gear' மாத்தினா, ரயில் போற பாதைய மாத்த முடியும். இப்போ 'Line man' எந்த பாதையில ரயில போகவைப்பார்.

1. ரயில் சாதாரணமாக போகாத பாதையில் ஒரு பையன் தான், ரயிலை திருப்பிவிட்டால் ஒரு பையனுக்கு தான் அடிப்படும். ஆனா! அந்த பையன், இந்த பாதையில் ரயில் போகாதுனு நம்பிக்கையா விளையாடிட்டு இருக்கான். ரயிலை அந்தப்பக்கம் திருப்பிவிட்டால், அந்த பையனோட நம்பிக்கை பொய் ஆகிடும்.

2. ரயில் எப்போதும் போகிற பாதையில் விட்டால், பல சிறுவர்கள் அடிப்படுவார்கள்..

சரி.. இப்போ நீங்கதான் அந்த 'Line man' ரயில் போறதுக்குள்ள முடிவு பண்ணுங்க..

நட்புடன்,

ஸ்ரீதர்

7 Comments:

At July 26, 2006 9:26 AM, Blogger சீனு said...

ஸ்ரீதர்,

இங்கே பாருங்கள். உங்களுக்கு பதில்.

 
At July 26, 2006 10:38 AM, Blogger மு.மயூரன் said...

மாய உலகில் நாம் சிக்கவைக்கப்பட்டிருக்கிறோம் என்ற களம் மேட்ரிக்ஸ் இயக்குனருக்கு ரொம்ப பிடித்திருக்கிறதோ என்னவோ, அவரது அடுத்தபடமான வீ ஃபோர் வன்டெட்டா வும் இதே கௌவோடு இருக்கிறது .
ஆனால் மேட்ரிக்ஸ் மூலம் பூடகமாக சொன்னதை அதில் நேரடியாகவே சொல்கிறார். அரசாங்கங்கள் உங்கள் சிந்திக்கும் சுதந்திரத்தை மறுதலித்து உங்களை மாய உலகில் அமிழ்த்தி வைத்திருக்கின்றன. மாய உலகிலிருந்து வெளியே வர புரட்சி ஒன்றே ஆயுதம்.

 
At July 26, 2006 12:57 PM, Blogger S. அருள் குமார் said...

//ஆங்கில படம் பாக்கும் போது நான் எப்போதுமே இரண்டாவது ரகம் தான். யாரையாவது பக்கதில ஒக்கார வச்சிக்கிட்டு கதை கேட்டுக்கிடே இருப்பேன்.//

நானும் இப்படித்தான் சீனு :)

அப்புறம் உங்க ரயில் கேள்விக்கு என் பதில்:

நான் அந்த line man-னா இருந்தா, ரயில் எப்பவும் போற பாதையைத் தான் தேர்ந்தெடுப்பேன். அதுக்கு காரணம் தனியா விளையாடிகிட்டு இருக்கிற பையனின் நம்பிக்கை இல்லை. வெகு நாட்களாய் பயன்படுத்தாத பாதையில் ரயில் செல்ல நேரிட்டால் ரயிலில் உள்ள அனைவருக்குமே பாதிப்பு என்பதால் :)

 
At July 27, 2006 2:51 AM, Blogger ஸ்ரீதர் said...

உங்கள் வருகைக்கு நன்றி மயூரன்,

வீ ஃபோர் வன்டெட்டா படம் திரைப்படம் வெளிவந்துவிட்டதா? நீங்கள் புரட்சியாளரா என்று தெரியவில்லை. ஆனால், புரட்சி எப்போதுமே அயுதம் அல்ல.

நன்றியுடன்,

ஸ்ரீதர்

 
At July 27, 2006 2:53 AM, Blogger ஸ்ரீதர் said...

This comment has been removed by a blog administrator.

 
At July 27, 2006 2:57 AM, Blogger ஸ்ரீதர் said...

உங்கள் வருகைக்கு நன்றி அருள்,

உங்கள் பதிலுக்கு நன்றி, இப்புதிருக்கு விடை சொல்ல சிறிது காலம் அவகாசம் வேண்டும்.

நன்றியுடன்,

ஸ்ரீதர்

 
At August 02, 2006 9:40 AM, Blogger ஸ்ரீதர் said...

மன்னிச்சிடுங்க விடை சொல்ல கொஞ்சம் தாமதம் அயிடுச்சு (ஆமா! எதோ ஒரு புத்தகத்தில இருந்து கேள்விய எடுத்துட்டு, அது எந்த புத்தகம் னு இவ்வளவு நாள் தேடுனது தெரியாதாக்கும்)..

நம்ம Line Man (அதாங்க நீங்க), எப்பவும் போற பாதையிலே வண்டிய போக விடுவாரு.. அங்க இருக்கிற 5-6 பசங்களுக்கு அங்க ரயில் போகும்னு தெரியும், அதனால, ரயில் சப்தம் கேட்டதும் ஒடிடுவாங்க.. இன்னொரு பாதையில இருக்குற பய, ரயில் எவ்வளவு தான் சப்தம் போட்டாலும் அது அடுத்தப்பாதையில தான் போகும்னு அமைதியா இருப்பான்.

கடைசியா அப்படி தான் அயிடுச்சி.. எல்லா பசங்களும் தப்பிச்சுட்டானுங்க..

இந்த கேள்வி, பசங்களோட உயிர் பற்றிதான்.. சில பேர், ரயில் கவுந்திடும் பதில் எல்லாம் சொல்லிருக்காங்க..

சரி இதுவும் சொல்லிடுறேன்.. இந்த கேள்வி, மனசே relax please, புத்தகத்திலிருந்து எடுத்தேன்.

 

Post a Comment

<< Home