May 25, 2006

All the world's a stage

நானும் ஒவ்வோரு வியாழக்கிழமை தோறும் துகள் எழுத வேண்டும் என்று அசைப்படுகிறேன். ஆனால் அது கடந்த வாரம் தவறிவிட்டது. எனது வலைப்பக்கங்கள் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளேன். அம்மா நான் எல்லா விஷயத்திலும் மிக பிடிவாதமாக இருகிறேன் என்று திட்டுவார். ஆனால் எனது நண்பர்கள் அப்படி சொல்வதில்லை. சில நெருங்கிய நண்பர்கள் உடன் பிடிவாதமாக இருந்திருகிறேன்.

எல்லா மனிதர்களுக்கும் ஒரு முகம், பல முகமூட்டிகள் உண்டு. இராவணன் போல மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். நண்பர்கள் ஒரு முகம், வீட்டில் ஒரு முகம், பணியிடஙகளில் ஒன்று இப்படி பல முகம். இந்த சமுதாயதிற்காக நாம் பல முகமூட்டிகளை மாற்ற வேண்டும். ஆனால் பலர் இந்த முகமூட்டிகளை பல முறை மாற்றி தங்கள் உண்மையான முகத்தை மறக்கின்றனர்.


"All the world's a stage" என்பது போல் எல்லோரும் இங்கு நடிகின்றோம்.

கடந்த சில வாரங்களாக தலைநகரில் நடந்து வரும் தீவிர இட ஒதுக்கீடு போராட்டம் அதிர்ச்சியாக உள்ளது. நான் எந்த பக்கத்திற்க்கும் பரிந்து பேசுவதில்லை. முடிந்த வரை சமத்துவமாக ஏழுத போகிறேன்.

மருத்துவர்கள் போராட்டதினால் நோயாளிகள் படும் வேதனையை தொலைக்காட்சியில் (NDTV) கண்டேன். அதில் ஒரு வயது குழந்தைக்கு இடது கண்ணில் அடிப்பட்டு தையல் போடிருந்தனர். அதை சுத்தம் செய்து மறுபடி போட வேண்டும். அதற்கு மருத்துவர்கள் இல்லாமல் அழும் காட்சி மனதை கலங்கவைத்தது.

இந்த போராட்டதிற்கான காரணம் எனக்கு சரியாக புரியவில்லை. NDTV நடத்திய கருத்து கணிப்பின் முடிவில் 88% பேர் இட ஒதுக்கீடு வேண்டாம் என்றும், 12% பேர் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் பதிலளித்து உள்ளனர். எனது கணிப்பு சரியானால், 88% மேல் வகுப்பை சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு வேண்டாம் என்றும், 12% பேர் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் ஒட்டளித்து உள்ளனர். இதிலிருந்து 88:12 என்ற விகித்ததில் ஒரு ஆங்கில தொலைக்காட்சியை பார்த்து, செல்பேசியை பயன்படுத்தி ஒட்டளிக்க திறன் பெற்றவர்களாக உள்ளனர். வகுப்பை வைத்து இட ஒதுக்கீடு முறை அமைவது விரும்பதகாதது. ஆனால் அதற்கு முன் நம் கல்வி முறை மாற்றப்பட வேண்டும். கல்வி தற்பொழுது வியாபாரமாக இருக்கிறது. தரமான கல்விக்கு விலை தந்து வாங்கவேன்டியுள்ளது. இது மாறினால் ஒழிய இட ஒதுக்கீடு கட்டயமாகிறது.

இந்த போராட்டம் மீருகத்தனமானது என நினைகின்றேன். ஒரு உயிர் மற்றொரு உயிர் வருந்துவதைக்கண்டு வேடிக்கை பார்க்காது. ஆனால் இன்று மாணவர்கள், மருத்துவமனையின் வாசலில் நோயாளிகள் செல்லவிடாமல் போராட்டம் செய்கின்றனர். இவர்கள் படித்தப்பின் மக்களுக்கு சேவை செய்வது கேள்வியாகிறது. நாளை இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய மாட்டேன் என்று கூறவும் வாய்ப்பிருகிறது. மருத்துவம் ஒரு தொழில் அல்ல, அது மக்கள் சேவை. ஒவ்வோரு மருத்துவரும் படித்தபின் சமுதாயதிற்காக சேவை செய்ய உறுதிமொழி எடுக்க வேண்டும். இனி அது தேவையிருக்காது.

மிகவும் வருத்ததுடன் எழுதிவிட்டேன். சரி இப்பொழுது ஒரு கீதா அக்காவின் வலைப்பக்கத்திலிருந்து ஒரு இணைப்பு. அவரது முதல் திருமண நாள் நினைவுகளை கடந்த வாரம் பகிர்ந்து கொண்டார்.

http://sivamgss.blogspot.com/2006/05/2_16.html


நட்புடன்,

ஸ்ரீதர்

தமிழ் இணைய பல்கலைக்கழகம்சற்றே சிறிய துகள்,


தற்செயலாக தமிழ் இணைய பல்கலைக்கழகம் இணையத்தளதை காண நேர்ந்தது. இந்த தளத்தில் பல சேவைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றது. இத் தளத்தில் உள்ள நூலகத்தை வலம் வர பதிவு செய்தேன். இந்த நூலகத்தில் பண்டைய தமிழ் நூலகள், இலக்கியங்கள், அகராதிகள் மற்றும் பட தொகுப்புகளை இலவசமாக படிக்க முடிந்தது.தமிழ் இலக்கணம், காப்பியங்களை இணையத்தில் தொகுத்து இருப்பது வியப்பாக இருக்கிறது. தமிழர்கள் கண்டிப்பாக பதிய வேண்டிய இணையத்தளம்.http://www.tamilvu.org/ஸ்ரீதர்

வலையில் விழுந்தது !!! -- எழில்முதல்வனின் கவிதை

தனியே விடு, என்னைத் தனியேவிடு
அழவேண்டும் நான் என்னைத் தனியே விடு

பெருஞ்சுமை நெஞ்சில் கனக்கிறது-ஒருபிரளயம் என்னுள் நடக்கிறது
நெருஞ்சியின் மேலே நடப்பது போல-என் நினைவுகள் என்னை வதைக்கிறது.

உடம்பே வாயாய் அழவேண்டும்-நான் 'ஓ' வென்றலறி விழ வேண்டும்
வடிகால் தேவை-இலையென்றால் இவ்வாரிதி எனை விழுங்கி விடும்.

ஊற்று மணற்கரை போல்-மனம்
உருகி நெகிழ்ந்திட வேண்டும்
நீற்றுத் துகளெனத் துன்பம் நீங்கிப்
பொடிந்திட வேண்டும்
வெந்த பசும்புண் போலே-இதயம்
இந்த அழுகையின்றி-மருத்துவத்தால்
ஏதும் பயனுண்டோ-தனியே விடு என்னை

ஒற்றைச் சிறிய கிளை -
முற்றி உடைந்த பலாப்பழத்தைப்
பற்றியே தாங்கிடுமோ?
இற்று முறிந்திடுமோ?
தளைகளை விட்டு நான் விடுபட வேண்டும்
தாங்கும் சுமைகளை இறக்கிட வேண்டும்

May 21, 2006

நவின திருவிளையாடல் !!!


May 04, 2006

இப்பொழுது எல்லாம் வலை துகள் எழுதுவதிற்க்கு சிறிது தயக்கம் வருகிறது. வலையில் உள்ள சில துகள்களை படிக்கும் போது நான் எல்லாம் எழுத ஒன்றும் பெரிதாக சொல்லவில்லை. இருந்தாலும், எனது துகளை பிறரால் தொடர முடியாத காரணத்தினால் இன்றும் தமிழை கொல்வேன்.

http://muthukmuthu.blogspot.com/
http://bbthots.blogspot.com/
http://kaipullai.blogspot.com/
http://thamizmanam.com/

கடந்த வாரம் அட்சய திருதை பண்டிகை. இந்த பண்டிகை யார் இந்த உலகிற்க்கு சொல்லியது என்று தெரியவில்லை. இது மலையாள தோழர்கள் கொண்டாடியதாக கேள்வி. ஆனால் இப்பண்டிகை இப்பொழுது உலகமே கொண்டாடப்படுகிறது. பலரை மாத இறுதியில் திண்டாட வைக்கிறது. இந்த வருடம் நான் தப்பினேன். நேற்று அம்மாவிடம் தங்க நிலவரம் பற்றி கேட்டேன். அது எட்டாக்கனியாக இனித்தது.

எனது அருமை தம்பி (சித்தியின் மகன்), சித்திக்கு தங்கம் தந்து குளிர செய்து விட்டான். எனது பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது. ஒரு வழியாக பின்னர் தருகிறேன் என்று தப்பிவிட்டேன்.

தமிழர் வருடபிறப்பை மறக்கும் நமக்கு, பிற பண்டிகை எதற்க்கு?. இப்பண்டிகையின் எனக்கு விளங்கவில்லை. ஒரு பக்கம் இது சுயநலத்தை வளர்ப்பதாக இருக்கிறது. Possession (Possessiveness) on the costlier thing. இதனால் ஒரு சிலருக்கே (தங்க கடை) லாபம்.


கடந்த வாரம் நிகழ்ந்த Karvvy சேதிக்கும் இதற்க்கும் பெரிய மாற்றம் இல்லை. தனி வியாபாரிகள் (Retail Investors) இதனல் நன்கு நஷ்டமடைந்து உள்ளனர்.

பிறகு சில திரை செய்திகள் :-).

சிலர் படம் எடுப்பதை விட்டு சும்மா இருக்கலாம். சமீபத்திய படங்கள் எல்லாம் குப்பைக்கு கூட விளங்காதவை. அவற்றை எடுப்பதிற்க்கு மாட்டுசாண எரிப்பொருள் செய்யலாம். எனக்கு நாடு திரும்பவே பயமாக இருக்கிறது. இங்கையே "Kஅஜ க டொச்த்" சொல்லிக்கொண்டு தங்கிவிடலாம் போல் உள்ளது.

"The Da-Vinci Code" படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. இது புத்தகமிலிருந்து படமாக எடுக்கபடுகிறது. இந்த படதின் சில பகுதிகள் இணையதில் காண முடிந்தது. சற்று சொதப்பலக்கு இருக்கும் என்று நினைகிறேன். இறுதி முடிவு படம் திரைக்கு வந்தப்பின் எழுதுகிறேன். அதுவரை,


http://flash.sonypictures.com/movies/davincicode/website/home.html